/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர்களை அலைக் கழிக்க கூடாது அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
/
வாக்காளர்களை அலைக் கழிக்க கூடாது அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
வாக்காளர்களை அலைக் கழிக்க கூடாது அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
வாக்காளர்களை அலைக் கழிக்க கூடாது அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : நவ 01, 2025 02:54 AM

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, ஆலோசனைகளை வழங்கினார்.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் மகாதேவன், நகராட்சி கமிஷ்னர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியதாவது :
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடர்பாக பணிகள் நடைபெற உள்ளளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள தாலுகா அலுவலகங்களில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தினை, ஒரு வாக்காளருக்கு 2 படிவத்தினை வழங்க வேண்டும். மேலும், வாக்காளர்களை எங்கும் அலைக்கழிக்காமல் அவர்களுக்கு வீடுகளுக்கு சென்று, சரியான விவரத்தினை கேட்டறிந்து, படிவத்தினை பூத்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட ஒரு படிவத்தினை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மற்றொரு படிவத்தினை வாக்காளர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர் பெயர், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்ய வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக சரிபார்த்து பூர்த்தி செய்ய வேண்டும். மேற்கண்ட பணிகளை வரும் 4ம் தேதி முதல் அடுத்த மாதம் டிச. 4ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

