/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
71 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்
/
71 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்
ADDED : நவ 01, 2025 02:54 AM
விழுப்புரம்: மாவட்டத்தில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று, வரும் 3ம் தேதி முதல் 5 ம் தேதி வரை ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு :
தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று, பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 71 ஆயிரம் பயனாளிகளின் வீடுகளுக்கும், வரும் 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று தினங்களில், பொது வினியோகத்திட்ட பணியாளர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

