/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசின் கவுரவ நிதி பெற அடையாள எண்... கட்டாயம் : வரும் 7ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்

ADDED : நவ 01, 2025 02:54 AM

விழுப்புரம்: மத்திய அரசின் பிரதமர் நிதியை பெறும் விவசாயிகள், வரும் 7ம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது, 20 ஆயிரத்து 103 விவசாயிகள், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் பயன் பெற தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர்.
மத்திய அரசு மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கு, விவசாயிகள் தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அரசின் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டப்பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையிலும், விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விவரங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பொது சேவை மையத்தின் மூலம் தங்களின் நில உடைமை விவரங்கள் இணைக்க வேண்டும். பின்னர், அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் பதிவு செய்து தரப்படும். இதன்படி, 2025-26ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெறலாம். இத்திட்டத்தில், 21வது தவணை தொகையினை பெறுவதற்கு, விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் பெற்றிருத்தல் அவசியம் என அரசு தரப்பில் அறிவிக்கப் பட் டுள்ளது.