/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் குளம் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
/
திண்டிவனத்தில் குளம் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
திண்டிவனத்தில் குளம் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
திண்டிவனத்தில் குளம் துார்வாரும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : மார் 05, 2026 03:49 AM

திண்டிவனம்:திண்டிவனத்தில் குளம் துார்வாரும் பணியை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோன் இந்தியா நிறுவனம், சமூகப் பொறுப்பு திட்டத்தின் மூலம், எக்ஸ்னோரா அமைப்பிற்கு ஒரு எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. வாடகை இல்லா இயந்திரம்” திட்டத்தின் கீழ், எந்தவித வாடகை கட்டணமும் இல்லாமல், நீர்நிலைகளை தூர்வாரி, சீரமைக்க முடியும்.
இந்த திட்டத்தின் மூலம், திண்டிவனம் நகராட்சி 3 வது வார்டிலுள்ள துலுக்கன் குளத்தை துார் வாரும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பானுமதி, நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், நகராட்சி மேலாளர் நெடுமாறன், கவுன்சிலர் ரேணுகா, கோனே இந்திய மேலாளர் விஜேந்திரன், எக்ஸ்னோரா சுப்பரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.