/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுாரில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
/
வானுாரில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 11, 2025 11:26 PM

வானுார்:வானுாரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
வானுார் வட்டத்திற்குட்பட்ட கரசானுார் ஊராட்சியில் பிரதான சாலை, கெங்கையம்மன் கோவில் தெரு மற்றும் வி.பரங்கனி ஊராட்சியில் பிரதமர் குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளிகள் வீடு கட்டி வருகின்றனர்.
இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பின், வி.பரங்கினி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து கொந்தாமூர் ஊராட்சிக்கு சென்ற அவர், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் தாவரவியல், உயிரியல், வேதியியல் போன்ற புதிய அறிவியல் ஆய்வகங்கள் கட்டப்பட்டு வருவதையும், அதே ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல நிதி திட்டத்தின் கீழ் ரூ1.27 லட்சம் மதிப்பீட்டில், புதிய கிராம அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். விரைவில் கட்டுமான பணிகள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி கலெக்டர் வெங்கடேஷ்வரன், ஒன்றிய சேர்மன் ஊஷா முரளி, தாசில்தார் வித்யாதரன், பி.டி.ஓ., மணிவண்ணன், உதவி பொறியாளர் மகேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.