ADDED : அக் 29, 2026 10:30 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, கஞ்சனுார் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இன்று (அக்.,29) கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், முத்தாம்பாளையம் ஏரி துார்வாரும் பணி, ஒன்றிய அலுவலகத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு மற்றும் அங்குள்ள திறந்த வெளிக்கிணற்றில் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
கஞ்சனுார் ஒன்றியத்தில் தென்பேர், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களிடையே கல்வி குறித்து ஆலோசனை வழங்கி பள்ளி வளாகத்தில் நடைபெறும் போர்வெல் பணியை பார்வையிட்டார்.
புதியதாக திறக்கப்பட்ட கஞ்சனுார் ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டு பின்னர் திருநந்திபுரம், கஸ்பா காரணை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்.
தாசில்தார் மகாதேவன், செயற்பொறியாளர் சக்தி முருகன், உதவி செயற்பொறியாளர் அன்பு, பி.டி.ஓ.,க்கள் சாகிதா பாணி, பாலச்சந்திரன் ,முல்லை, ஏ.பி.டி.ஓ., பாபு, ஒன்றிய பொறியாளர்கள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், அப்துல் ரகீம், உட்பட அரசு பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
