/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கலெக்டர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 06, 2025 11:46 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் துவங்கியது.
விழுப்புரம் தொகுதியில், அய்யங்கோவில்பட்டு ஊராட்சி, முத்தாம்பாளையம் கிராமத்திலும், விக்கிரவாண்டி தொகுதி சிந்தாமணி ஊராட்சி, திருக்கோவிலுார் நகராட்சி பகுதிகளில் நடந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள கணக்கீட்டு படிவத்தை ஒரு வாக்காளருக்கு 2 படிவம் வழங்க வேண்டும்.
வாக்காளர்களை எங்கும் அலைகழிக்காமல் அவர்களின் வீட்டிற்கே பூத் அலுவலர்கள் சென்று வாக்காளர்களின் சரியான விபரத்தை கேட்டறிந்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த இரு படிவங்களில் ஒரு படிவத்தை பூத் அலுவலர்கள் பெற்று கொள்ள வேணடும். மற்றொரு படிவத்தை வாக்காளர்கள் வைத்து கொள்ள வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர் பெயர், பாகம் எண், உறவு முறை ஆகிய விபரங்களை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002 வாக்காளர் பட்டியல் விபரங்களை சரியாக சரிபார்த்து பூர்த்தி செய்திட வேண்டும்.
இந்த பணிகளை டிசம்பர் 4ம் தேதிக்குள் பூத் அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களிடம் வழங்கி பூர்த்தி செய்து திரும்ப பெற வேண்டும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிறந்த முறையில் பணியை செய்து முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
சப் கலெக்டர் ஆனந்த்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், தாசில்தார்கள் செல்வமூர்த்தி, மகாதேவன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

