ADDED : நவ 06, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், நேற்று காலை நகர பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கிழக்கு பாண்டி ரோடு ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் அதிவேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்த தாமரைகுளம் கலியன் மகன் அபிலாஷ் பாலாஜி, 19; மீது, வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
இதேபோல், கோலியனுார் கூட்டுரோடு அருகே அதிவேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி வந்த ராமையான்பாளையம் அய்யனார் மகன் ஆகாஷ், 21; என்பவர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

