/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு
/
பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 16, 2025 11:57 PM

வானூர்: வடகிழக்கு பருவ மழையையொட்டி வானூர் தாலுகா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதையொட்டி வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பருவமழை அதிகரிக்கும் போது திடீரென சாலைகளில் உள்ள மரம் முறிந்து போக்குவரத்து தடை ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மழைக்காலத்தில் பொதுமக்களை பத்திரமாக பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட அவர், இயற்கை பேரிடர் காலங்களில் தேவையான கருவிகள் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்த பட்டானுார் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பி.டி.ஓ., சுபாஷ்சந்திரபோஸ், தாசில்தார் வித்யாதரன் உடனிருந்தனர்.

