/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் நிறுத்துவதில் மோதல்: 4 பேர் கைது
/
பைக் நிறுத்துவதில் மோதல்: 4 பேர் கைது
ADDED : நவ 16, 2025 11:57 PM
வானுார்: புள்ளிச்சப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் ராஜேஷ், 24; இவரும் ராவுத்தன்குப்பம் கிராமத்தை சேர்ந்த திருமாள் மகன் விஷ்ணு, 26; பிரவின், ராகுல் உள்ளிட்ட சிலரும் புளிச்சப்பள்ளம் உய்யாத்தம்மன் கோவில் செல்லும் வழியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது, புளிச்சப்பள்ளத்தை சேர்ந்த நாகமணி மகன் கலாநிதி, 30; என்பவர், தனது நண்பர்களுடன் பைக்கில், வயலுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, வழியில் ராஜேஷ் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இதை கலாநிதி தரப்பினர் தட்டிக்கேட்டுள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் பிரவின, கலாநிதியை தாக்கியுள்ளார். பின், அவரது பைக்கின் சாவியையும் பறித்து வைத்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த கலாநிதியின் நண்பர்கள் வந்த போது, இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டுள்ளனர்.
இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், கலாநிதி தரப்பை சேர்ந்த ஏழு பேர் மீதும், கலாநிதி தாய் சுகுணா கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் தரப்பை சேர்ந்த ஏழு பேர் மீதும் வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மோதல் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

