/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புத்தகத் திருவிழாவில் நுால் வெளியிடுவோர் 18ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் பழனி தகவல்
/
புத்தகத் திருவிழாவில் நுால் வெளியிடுவோர் 18ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் பழனி தகவல்
புத்தகத் திருவிழாவில் நுால் வெளியிடுவோர் 18ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் பழனி தகவல்
புத்தகத் திருவிழாவில் நுால் வெளியிடுவோர் 18ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் பழனி தகவல்
ADDED : ஜன 13, 2024 03:33 AM
விழுப்புரம் : மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 2வது புத்தக கண்காட்சி திருவிழா விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்கள் புத்தக கண்காட்சி தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
அரங்கில் கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு, புதினம், கவிதை, பண்பாடு அறிவியல், ஆன்மிகம், போட்டி தேர்விற்கான புத்தகங்கள், சரித்திரம், சமூக நாவல்கள் என அனைத்து வித புத்தகங்களும் இடம்பெற உள்ளன.
தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் நடபெற உள்ளன. மாலையில் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், சொற்பொழிவுகளும், முக்கிய பிரமுகர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், உள்ளூர் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் தயார் நிலையில் உள்ள புத்தகங்களை வெளியிடப்படும். புத்தகத்தை வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள், உள்ளூர் எழுத்தாளர்களை உள்ளடக்கி கலெக்டர் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம், புத்தகத்தின் 2 பிரதிகளோடு வரும் 18ம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த நேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பெருந்திரள் புத்தக வாசிப்பு நடவடிக்கையையொட்டி, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை தங்களின் வங்கி கணக்கு மூலம் வழங்கிட வேண்டும்.