/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் விரைந்து மீட்பு பணி கலெக்டர் பழனி தகவல்
/
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் விரைந்து மீட்பு பணி கலெக்டர் பழனி தகவல்
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் விரைந்து மீட்பு பணி கலெக்டர் பழனி தகவல்
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் விரைந்து மீட்பு பணி கலெக்டர் பழனி தகவல்
ADDED : அக் 16, 2024 07:06 AM

விழுப்புரம் : 'மழைநீர் சூழ்ந்த பகுதிகளில், விரைந்து மீட்பு பணி மேற்கொள்ளப்படும்' என கலெக்டர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பழனி நேற்று நேரில் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.
விழுப்புரத்தில் தொடர் மழையால் மழைநீர் தேங்கிய புதிய பஸ் நிலையம், பெருந்திட்ட வளாக சிறுவர் பூங்கா, மழைநீர் தேங்கிய குடியிருப்புகளான முத்தோப்பு திடீர் நகர் பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், 'வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தொடர் மழையால் தேங்கும் மழைநீர் உடனுக்குடன் ராட்சத மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த மழை நீர் வெளியேறும் பாதைகளும் சீர்படுத்தப்பட்டு வருகிறது. முத்தோப்பு திடீர் குப்பம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
பலத்த கனமழை என அறிவிப்பு வெளியாகியுள்ளதால், நகரில் மழைநீர் தேங்கினால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் மோட்டார் மற்றும் நீர்வெளியேற்றும் வாகனங்கள் மூலம் வெளியேற்றுவதற்கான பணிகளை நகராட்சி சார்பில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் ஆய்வு செய்து, மீட்பு குழுவினர் தயார்படுத்தப்பட்டுள்ளனர். மழை பாதிப்புகள் குறித்து, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 மற்றும் 04146 223265 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்' என்றார்.
ஆய்வின்போது நகராட்சி கமிஷனர் வீரமுத்துகுமார், தாசில்தார் கனிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.