/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முகையூர் ஒன்றியத்தில் கலெக்டர் பழனி ஆய்வு
/
முகையூர் ஒன்றியத்தில் கலெக்டர் பழனி ஆய்வு
ADDED : அக் 24, 2024 12:09 AM

கண்டாச்சிபுரம் : முகையூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
முகையூர் ஒன்றியம் இருதயபுரம் ஊராட்சியில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை மற்றும் புதிய ஏரி அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். தொடர்ந்து காரணைபெரிச்சானுார் ஊராட்சியில் நடைபெற்று வரும் நபார்டு திட்டப்பணிகள் மற்றும் புதிய மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார். கலைஞர் இல்லம், பிரதம மந்திரியின் கிராம குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வீரசோழபுரம் ஊராட்சியில் நடந்து வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். முகையூர் பி.டி.ஓ.,க்கள் சண்முகம், ஜகன்நாதன்,இன்ஜினியர் குணசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.