/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வங்கியாளர்களுக்கு கலெக்டர் பரிந்துரை

ADDED : டிச 17, 2025 06:55 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான கடனுதவி திட்டங்களுக்கு வங்கியாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில் திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் செந்தில்வடிவு, விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நாசர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில், 'மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம்.
மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலல் மாநில மற்றும் மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களின் செயல்பாட்டினை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
மேலும், சுய வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழான கடனுதவிகள், வேலை வாய்ப்பினை தீர்ப்பதிலும் பிராந்திய பொருளாதார மேம்பாட்டிலும் வகிக்கும் பங்கு அவற்றின் மீது நேர்மறையான முடிவுகள் எடுக்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்விக் கடன் குறித்து விரைந்து தீர்வு காண வேண்டும்' என்றார்.