/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு... எப்போது?:மாற்று பாதை இல்லாததால் மக்கள் அவதி
/
நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு... எப்போது?:மாற்று பாதை இல்லாததால் மக்கள் அவதி
நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு... எப்போது?:மாற்று பாதை இல்லாததால் மக்கள் அவதி
நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு... எப்போது?:மாற்று பாதை இல்லாததால் மக்கள் அவதி
ADDED : டிச 17, 2025 06:54 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாற்றுவழி பாதைக்கு போதிய தீர்வின்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். விழுப்புரம் நகர போக்குவரத்திற்கு முக்கிய சாலைகளான புதுச்சேரி, சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகளில் அதிகளவு வாகனங்கள் பயணிக்கின்றன. சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழியாக குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்வதற்கு சாலைகள் உள்ளது.
புதுச்சேரி நெடுஞ்சாலையில் மாற்று வழி பாதையாக கீழ்பெரும்பாக்கம் வழியாக செல்லும் சாலை வசதி மட்டுமே உள்ளது. மழைக் காலங்களில் கீழ்பெரும்பாக்கம் தரை பாலத்தில் தண்ணீர் தேங்கினாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் வாகன ஓட்டிகள் செல்ல மாற்று வழிப்பாதை இல்லை.
இந்த சூழலில், புதுச்சேரி நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே நகராட்சி நிர்வாகம் மூலம் சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் புதைக்கும் பணி நடக்கிறது. மேலும், ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு தரமற்ற சாலையாக உள்ளது. இந்த சாலைகள் புதுப்பிக்கும் பணியால் ஒருவழிப் பாதையில் வாகனங்கள் அனுப்பப்படுகிறது.
இதனால், புதுச்சேரி நெடுஞ்சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து பாதிப்பில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
கீழ்பெரும்பாக்கம் மார்க்கமாக பலர் சென்றாலும், இங்குள்ள சாலை படுமோசமாக இருப்பதால் அந்த சாலையில் செல்வதற்கும் அச்சமடைகின்றனர்.
தற்போது மாற்று வழிப்பாதையாக உள்ள கீழ்பெரும்பாக்கம் வழிப்பாதையில் உள்ள சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் விதமாக சாலையை தரமாக சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

