/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயனாளிகளுக்கு கலெக்டர் தையல் இயந்திரம் வழங்கல்
/
பயனாளிகளுக்கு கலெக்டர் தையல் இயந்திரம் வழங்கல்
ADDED : பிப் 11, 2026 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் உட்பட 145 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 28 ஆயிரத்து 480 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்களை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

