/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா
/
ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 11, 2026 04:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பனங் குப்பம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 9ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற முன்னாள் புதுச்சேரி கலெக்டர் சுந்தரேசன் சிறப்புரையாற்றினார். கல்வி நிர்வாக இயக்குநர் எமர்சன் ராபின், நிர்வாக தலைவர் வாலண்டினா லெஸ்லி, கல்வி நிர்வாக தலைவர் சுகன்யா ராபின், இணை செயலாளர் நித்தின் ஜோஸ்வா, முதல்வர் விஜயா, துணை முதல்வர் தனலட்சுமி உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்தாண்டு நடந்த போட்டிகளில் வென்ற குழுவின் மாணவ தலைவருக்கும், ஆசிரியர்களுக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் இயற்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தும் உலக உயிர்களை காக்கும் உயிர்நாடி என்பதை வெளிப்படுத்தி காட்டினர்.

