/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு

ADDED : நவ 06, 2025 05:11 AM

செஞ்சி: செஞ்சி தொகுதியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார்.
தமிழக முழுவதும் கடந்த 4ம் தேதி துவங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக செஞ்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒட்டம்பட்டு, காரை, அப்பம்பட்டு கிராமங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி நடந்து வருகின்றது.
இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல்களை சரி பார்த்து வருகின்றனர். இப்பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி பணிகள் நடந்து வருவதை உறுதி செய்தார். அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது செஞ்சி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் தமிழரசன், தாசில்தார் துரைச்செல்வன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.