/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென்பெண்ணை ஆற்றில் இறங்கக்கூடாது; கலெக்டர் எச்சரிக்கை
/
தென்பெண்ணை ஆற்றில் இறங்கக்கூடாது; கலெக்டர் எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் இறங்கக்கூடாது; கலெக்டர் எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் இறங்கக்கூடாது; கலெக்டர் எச்சரிக்கை
ADDED : அக் 13, 2025 12:44 AM
விழுப்புரம்; சாத்தனுார் அணையில் இருந்து உபரி நீர் திறப்பதால் தென்பெண்ணை ஆற்றில் மக்கள் இறங்கக்கூடாது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணையில் நேற்று முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது வினாடிக்கு 6,000 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து காலை 9:00 மணிக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி அளவு வரை உபரிநீர் வெளியேற்றப்படலாம். நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவு மற்றும் சாத்தனுார் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, ஆகியவற்றை பொருத்து, சாத்தனுார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும். இதனால், தென்பெண்ணை ஆற்றில் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.