ADDED : அக் 13, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; செஞ்சியில், தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை, தீபாவளி பண்டிகை மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி செஞ்சி கோட்டை சர்க்கரை குளத்தில் நடந்தது.
மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் குளத்தில் விழுந்தவரை மீட்பது, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது, தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து, பொது மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இந் நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தீயணைப்பு வீரர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.