/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார், திருவக்கரை கோவில் விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் ஆலோசனை
/
மேல்மலையனுார், திருவக்கரை கோவில் விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் ஆலோசனை
மேல்மலையனுார், திருவக்கரை கோவில் விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் ஆலோசனை
மேல்மலையனுார், திருவக்கரை கோவில் விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் ஆலோசனை
ADDED : ஏப் 26, 2025 03:53 AM
விழுப்புரம் : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா, திருவக்கரை சந்திரமவுலீஸ்வர் கோவில் பவுர்ணமி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 27ம் தேதி அமாவாசை விழாவும் மற்றும் மே 11ம் தேதி திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஜோதி விழாவும் நடக்கிறது.
பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தற்காலிக கழிவறைகள், தற்காலிக பஸ் நிலையங்கள், குப்பைதொட்டிகளை அமைத்து உடனுக்குடன் அகற்றி சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
தெருக்கள், கோவில் வளாகம் மற்றும் இதர இடங்களில் திருட்டு, வழிப்பறி மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, போதிய போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
கோவில் வளாகங்களில் தற்காலிக கடைகள் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். மின் வழித்தடங்களை பார்வையிட்டு சரிசெய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்.
கூட்டநெரிசலை தவிர்த்திட தடுப்புகட்டை வசதிகளை அமைத்திட வேண்டும். தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட வேண்டும். சிறப்பு பஸ் வசதி, அனைத்து இணைப்பு சாலைகளையும் இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்து, தரமானதாக விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், ஆர்.டி.ஓ., முருகேசன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

