/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வளர்ச்சி அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
/
ஊரக வளர்ச்சி அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 22, 2025 08:55 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சிகளில் கட்டப்படும் வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
பின், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம் உட்பட பல திட்டங்களின் கீழ் ஊராட்சிகளில் துவங்கி நடைபெறும் வீடுகளின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும், அவ்வப்போது பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்பித்திட வேண்டும்.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மூலம் பயனாளிகள் விரைந்து வீடு கட்டி முடிக்க சிமென்ட், கம்பிகளை விரைந்து வழங்கிட வேண்டும் என பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பொறியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.