ADDED : மே 09, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த சாணிமேட்டைச் சேர்ந்தவர் சங்கர் மகள் அம்சா, 19; விழுப்புரம் அரசு கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்த அம்சாவை, அவரது தாய் ராதிகா, 45; வீட்டுவேலை செய்யுமாறு கூறி திட்டினார். இதனால், கோபித்துக்கொண்ட அம்சா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.