/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை
/
கல்லுாரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை
ADDED : பிப் 21, 2024 11:19 PM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே சாவிற்காக காத்திருக்கிறேன் என ஸ்டேட்டஸ் வைத்த மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் அடுத்த ,தீவனுார் ஆசூரை சேர்ந்த சந்திரபாபு மகன் கார்த்திக் ,21;இவர் திண்டிவனம் அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 18 ம் தேதி இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை இவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் வெங்கந்துார் கிராமத்தில் ரமேஷ் என்பவரது விவசாய கிணற்றில் கார்த்திக் இறந்து கிடந்தார்.
கார்த்திக் தனது செல் போனில் 'ஐயம் வெயிட்டிங் பார் மை டெத்' என ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
தகவலறிந்த பெரியதச்சூர் போலீசார், கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தந்தை சந்திரபாபு புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.