
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர்: கல்லூரி மாணவியை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி சேலியமேடு அடுத்த ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 50; இவரது மகள் புவனாஸ்ரீ, 18; வானூர் அடுத்த பெரம்பையில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி, மூலக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த புவனாஸ்ரீ, காலையில் எழுந்து பார்த்த போது காணவில்லை.
உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ராமகிருஷ்ணன், ஆரோவில் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.