/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
/
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 23, 2025 02:30 AM

வானுார்,: மாவட்ட விழிப்புணர்வு போட்டியில் பரிசு பெற்ற வானுார் அரசு கல்லுாரி மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் பாராட்டினார்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு, போதை ஒழிப்பு குறித்த கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில் 55 விழிப்புணர்வு அரங்குகள் இடம் பெற்றிருந்தன. சிறந்த படைப்புகளை அமைத்த மாணவ, மாணவியர்களுக்கு, எஸ்.பி., சரவணன் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
ஒட்டுமொத்த கண்காட்சி அரங்கத்தில், வானுார் அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் அமைத்த அரங்கம், இரண்டாம் இடத்தை பிடித்தது.
பரிசு வென்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களை கல்லுாரி முதல்வர் வில்லியம் பாராட்டினார்.