/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரீன் பாரடைஸ் பள்ளியில் வண்ண தின கொண்டாட்டம்
/
கிரீன் பாரடைஸ் பள்ளியில் வண்ண தின கொண்டாட்டம்
ADDED : செப் 18, 2025 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் வண்ண தினம் கொண்டாடப்பட்டது.
மழலையர் வகுப்பு மாணவர்கள், அனைவரும் சிகப்பு நிறத்தினை மையமாகக் கொண்டு, வண்ண தினத்தை கொண்டாடினர்.
வகுப்பறைகள், ஆடைகள், சிவப்பு நிறத்தில் உள்ள பொருட்கள், பொம்மைகள் என மழலையர் வகுப்பறைகளை மாணவர்கள் அலங்கரித்தனர்.
விழாவை பள்ளி தாளாளர் சண்முகம் துவக்கி வைத்தார். முதன்மை இயக்குனர் வனஜா சண்முகம் முன்னிலை வகித்தார்.
வண்ண தினத்தினை சிறப்பாக கொண்டாடிய மாணவர்களையும், ஆசிரியர்களையும் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம், பள்ளி முதல்வர் சங்கீதா ஆகியோர் பாராட்டினர்.