/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு பாராட்டு
/
மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு பாராட்டு
ADDED : நவ 16, 2025 11:39 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவில் சிறப்பாக பணி புரிந்த போலீசாரை எஸ்.பி., பாராட்டினார்.
விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில், காரில் மது பாட்டில் கடத்தி வந்தவர்களை பிடித்த விழுப்புரம் மதுவிலக்கு ஏட்டுகள் குணசீலன், விஜயகுமார் மற்றும் காவலர்கள் வினோத், சிவபிரகாசம், சிவசக்திமைந்தன் ஆகியோரை எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.
இதே போல், திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு ஏட்டுகள் ராமச்சந்திரன், மணிபாலன், கார்த்திகேயன், கோட்டகுப்பம் ஏட்டுகள் பசுபதி, புருஷோத்தமன், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்-5ல் பணிபுரியும் ஏட்டுகள் அழகுவேல், ராமதாஸ் ஆகியோர் சிறப்பாக பணி செய்தமைக்காக நற்சான்றிதழ் வழங்கினார்.

