/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர்; கவுன்சிலர்களுக்கு அழைப்பில்லை
/
பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர்; கவுன்சிலர்களுக்கு அழைப்பில்லை
பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர்; கவுன்சிலர்களுக்கு அழைப்பில்லை
பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர்; கவுன்சிலர்களுக்கு அழைப்பில்லை
ADDED : ஜன 16, 2024 06:23 AM
திண்டிவனம் நகராட்சியில் பொங்கல் விழாவை, நகராட்சி நிர்வாகம் சார்பில் தனியாகவும், கவுன்சிலர்கள் தனியாகவும் கொண்டாடியதால் பரபரப்பு நிலவியது.
நகராட்சி சார்பில், ஓ.பி.ஆர்.பூங்காவில் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பங்கேற்ற பொங்கல் விழாவில், நகர மன்ற தலைவர் நிர்மலா, கமிஷனர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், கவுன்சிலர்களுக்கு அழைப்பு இல்லை என்பதால் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கு பதிலடி தரும் வகையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் ஏற்பாட்டில், பொங்கல் வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். திண்டினத்தில் நகராட்சி நிர்வாகம், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் என தனித்தனியாக போட்டி பொங்கல் விழா நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.