/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கழிவறைக்குள் சிக்கிய நபரால் பரபரப்பு
/
கழிவறைக்குள் சிக்கிய நபரால் பரபரப்பு
ADDED : மார் 06, 2024 02:20 AM
திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில், பெண்கள் கழிவறையில் புகுந்து தாழ்பாள் போட்டுக் கொண்ட நபரால் பரபரப்பு நிலவியது.
மேல்மருவத்துாரைச் சேர்ந்தவர் முத்து, 57; இவர், தலையில் பலத்த காயத்துடன் கல்லுாரி சாலையில் கிடந்ததாக 108 ஆம்புலன் ஊழியர்கள் மீட்டு வந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும், அந்த நபர், அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்குள் சென்றதால் அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் கள் அச்சமடைந்தனர். அப்போது, அந்த நபர் அங்கிருந்த பெண்கள் கழிவறையின் உள்ளே சென்று, தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து சிகிச்சை பெறும் பெண்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, நீண்டநேரம் மீட்கும் பணியில் ஈடுபட்டும் அந்த நபரை மீட்க முடியவி்லலை.
நேற்று காலை, திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் வந்து, கழிவறையின் கதவை உடைத்து அந்த நபரை மீட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

