ADDED : மார் 16, 2025 11:18 PM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பொன்முடி, சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையை வழங்கி பேசும் போது, விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு 1,400 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.3.50 லட்சம் செலவில் சமுதயா வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது.
தற்போது விழுப்புரம் நகர்புறத்தை சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தி, 5 வகையான ஊட்டசத்து உணவுகள், வளையல்கள், பூமாலை, பழங்கள், மஞ்சள், குங்குமம், தாம்புலம் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 7,600 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.22.10 லட்சம் மதிப்பீட்டில் நடத்தி, கர்ப்பக்கால பராமரிப்பு திட்டங்களில் பயனடைந்துள்ளனர் என்று பேசினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர்மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.