UPDATED : நவ 06, 2026 07:18 PM
ADDED : நவ 05, 2026 09:29 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: வளவனுார் பேரூராட்சியில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடத்தை அமைச்சர் ஆனந்த் திறந்து வைத்தார்.
வளவனுார் பேரூராட்சி, திருவள்ளுவர் நகரில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் பொது நிதி 2025–26 திட்டத்தின் கீழ் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமுதாய கூடத்தை, அமைச்சர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின், அமைச்சர் ஆனந்த், கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் அங்குள்ள அறைகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
