/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளுக்கு இழப்பீடு; எம்.எல்.ஏ., கோரிக்கை
/
விவசாயிகளுக்கு இழப்பீடு; எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜன 13, 2024 04:11 AM
திண்டிவனம்: தொடர் மழையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அர்ஜூனன் எம்.எல்.ஏ., கேரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
மரக்காணம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு பெய்த கன மழையின்போது அதிக அளவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட முருக்கேரி, நடுக்குப்பம், சிறுவாடி, வடநெற்குணம், எண்டியூர் கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தேன். 3050 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் 1070 ஏக்கர் உளுந்து, 125 ஏக்கர் பனிப்பயிர், 1350 ஏக்கர் வேர்க்கடலை 1410 ஏக்கர் தர்பூசணி மற்றும் 50 ஏக்கரில் காய்கறி பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.