
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை சீரமைக்கப்படுமா?
மேல்மலையனுார் அடுத்த கீழ்செவலாம்பாடி - பெருவளூர் வரையிலான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
ராஜி, கீழ்செவலாம்பாடி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
மேல்மலையனுார் அக்னி குளம் அருகே சாலை வளைவுகளில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது.
வேடி, மேல்மலையனுார்.
குரங்குகளால் பாதிப்பு
முருக்கேரி, சிறுவாடியில் குரங்குகள் தொல்லையால் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகிலன், முருக்கேரி.
கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு
திருக்கோவிலுார், நான்குமுனை சந்திப்பில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
கண்ணன், கீழையூர்.

