/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துப்புரவு பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது புகார்
/
துப்புரவு பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது புகார்
துப்புரவு பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது புகார்
துப்புரவு பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது புகார்
ADDED : ஜன 12, 2025 04:42 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பணியை தடுத்து தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது செயல் அலுவலர் புகார் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் தலைமையில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியிலுள்ள பூங்கா மதில் சுவர் அருகில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராம்குமார்,44 : என்பவர் பணியாளர் பெண்களை பார்த்து தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தகவலறிந்த பேரூராட்சி செயல்அலுவலர் ேஷக் லத்தீப் விக்கிரவாண்டி போலீசில் ராம்குமார் மீது புகார் செய்தார்.
இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.