/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொய் புகாரில் கடைக்கு சீல் வியாபாரி புகார் மனு
/
பொய் புகாரில் கடைக்கு சீல் வியாபாரி புகார் மனு
ADDED : செப் 30, 2025 07:44 AM
விழுப்புரம் : செஞ்சி அருகே பொய் புகாரில், கடைக்கு வைத்த சீலை அகற்றக்கோரி வியாபாரி மனு அளித்தார்.
செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டைச் சேர்ந்தவர் இர்பான். மாற்றுத் திறனாளியான இவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:
எங்கள் கிராமத்தில் உள்ள மசூதி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை வைத்துள்ளேன். இந்நிலையில் எனது உறவினர் ஒருவர் முன்விரோதம் காரணமாக, என் மீது பொய் புகார் அளித்துள்ளதால், கடையில் குட்கா வைத்திருந்ததாக பொய் வழக்கு பதிவு செய்து, கடைக்கும் சீல் வைத்துள்ளனர். ஆதாரமின்றி கடையை மூடி சீல் வைத்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.