/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு பயிருக்கு அறிவித்த தொகைக்கு மேல் வட்டி கேட்பதாக... புகார்; கோட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயி ஆதங்கம்
/
கரும்பு பயிருக்கு அறிவித்த தொகைக்கு மேல் வட்டி கேட்பதாக... புகார்; கோட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயி ஆதங்கம்
கரும்பு பயிருக்கு அறிவித்த தொகைக்கு மேல் வட்டி கேட்பதாக... புகார்; கோட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயி ஆதங்கம்
கரும்பு பயிருக்கு அறிவித்த தொகைக்கு மேல் வட்டி கேட்பதாக... புகார்; கோட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயி ஆதங்கம்
ADDED : நவ 20, 2024 05:39 AM

விழுப்புரம்: கரும்பு பயிருக்கு 3 லட்சம் ரூபாய் வரை வட்டியின்றி கடன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், 1.60 லட்சம்ரூபாய்க்கு மேல் வட்டி விதிக்கப்படும் என வங்கி அறிவித்திருப்பதாக குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயி புகார் தெரிவித்தார்.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார்.
தாசில்தார்கள் விழுப்புரம் கனிமொழி விக்கிரவாண்டி யுவராஜ், வானுார் நாராயணமூர்த்தி மற்றும் விவசாயிகள், விவசாய பிரநிதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:
கூட்டுறவு வங்கிகளில் நெற்பயிருக்கு விவசாயிகளுக்கு 1.60 லட்சம் ரூபாய் வரையிலும், கரும்புக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும் வட்டியின்றி கடன் வழங்கப்படுகிறது.
ஆனால், ஒரு வங்கி கரும்பு பயிருக்கு 1.60 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள தொகைக்கு வட்டி விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதுபோன்று அறிவித்த வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கு சிகிச்சையளிக்க மருந்து இல்லை. இதனால் பாம்பு கடிக்கு உள்ளானவர்களை மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கு சிகிச்சையளிக்க மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை அனுமதியின்றி ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பல வாய்க்கால்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் உரிய முறையில் வெளியேற இயலாத நிலையுள்ளது.
மாவட்டத்தில் உளுந்து விதைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து விவசாயிகள் தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை உடனே சரிசெய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னங்கன்றுகள் உரிய முறையில் வழங்கவில்லை. விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இந்த கன்றுகள் முழுமையாக சென்று சேரவில்லை. 40 ஆயிரம் தென்னங்கன்றுகள் காய்ந்து வீணாகிறது.
கடந்த 2021ம் ஆண்டில் உடைந்த தளவானுார் அணைக்கட்டை சீரமைக்க வேண்டும். இல்லையேல் புதிய அணைக்கட்டை கட்ட வேண்டும். ஏரிக்கான நீர்வரத்து வாய்க்கால்களைத் துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இதையடுத்து, ஆர்.டி.ஓ., சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

