/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளி பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளி பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்
ADDED : செப் 23, 2025 09:42 PM

விக்கிரவாண்டி, ;விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் மாற்றுத் திறனாளி பள்ளிக்கு ரோட்டரி கிளப் சார்பில் கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பனையபுரம் துளிர் சிறப்பு பள்ளியில், பாண்டிச்சேரி பிரண்ட்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் நடந்த விழாவிற்கு, பள்ளி தாளாளர் தனலட்சுமி வடிவேல் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் காமாட்சி சிவராமன், பள்ளி நிறுவனர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.
பாண்டிச்சேரி பிரண்ட்ஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் முருகன் சிறப்பு பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கம்ப்யூட்டர் வழங்கியும், மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி பேசினார் .
சங்க செயலாளர் ஆனந்த முருகன், பொருளாளர் பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் ராஜசேகர், ராஜ்குமார், ஆசிரியர்கள் திருக்குமரன், விசித்தா, உளவியலாளர் நிஷாந்தி, டாக்டர் நித்யஸ்ரீ, செவிலியர் ஜெயபிரதா, ஊழியர் சிவசங்கரன் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.