/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கலைக்கல்லுாரியில் கணினி அறிவியல் மன்ற விழா
/
அரசு கலைக்கல்லுாரியில் கணினி அறிவியல் மன்ற விழா
ADDED : மார் 15, 2025 08:37 PM

வானுார்; வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கணினி அறிவியல் மன்ற விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, கணினி அறிவியல் துறையில் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வது குறித்து பேசினார்.
கணினி அறிவியல் துறைத் தலைவர் அருள்முருகன் வாழ்த்தி பேசினார். மாணவி சங்கீதவாணி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர் சென்னை தனியார் நிறுவன வணிக ஆய்வாளர் மரியா, செயல்திட்டம் மற்றும் உள்ளிருப்பு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியை மாணவி பவதாரணி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் சுதாகர், ஆரோக்கிய நாதன், அர்ச்சனா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.