/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டக்டருக்கு தவறான ஆப்பரேஷன்? மருத்துவ குழு விசாரணைக்கு பரிந்துரை
/
கண்டக்டருக்கு தவறான ஆப்பரேஷன்? மருத்துவ குழு விசாரணைக்கு பரிந்துரை
கண்டக்டருக்கு தவறான ஆப்பரேஷன்? மருத்துவ குழு விசாரணைக்கு பரிந்துரை
கண்டக்டருக்கு தவறான ஆப்பரேஷன்? மருத்துவ குழு விசாரணைக்கு பரிந்துரை
ADDED : ஜூலை 07, 2025 03:29 AM

விழுப்புரம்: கண்டக்டருக்கு தவறான ஆப்பரேஷன் நடந்தது தொடர்பாக விசாரிக்க, சென்னை சுகாதாரத்துறை இயக்குனரகத்திற்கு, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பரிந்துரைத்து உள்ளார்.
விழுப்புரம் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 46; தனியார் பஸ் கண்டக்டர்.
இவர் வலது காலில் வீக்கம் ஏற்பட்டு, சில தினங்களுக்கு முன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அங்கு, வலது காலுக்கு பதிலாக இடது காலில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட டாக்டர்கள், செவிலியர், பணியாளர் ஆகியோரிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை டாக்டர்கள் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
மாரிமுத்து இடது காலிலும் வலி இருப்பதாக டாக்டரிடம் கூறியுள்ளார்.
அதனால், இடது காலில் அறுவை சிகிச்சை செய்யாமல், லேசாக கிழித்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த காலில் எதுவும் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்யவில்லை.
உடனடியாக இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதால், இன்று அல்லது நாளை வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், தவறாக அறுவை சிகிச்சை நடந்துவிட்டதாக செய்தி வெளியானதால், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, சென்னை சுகாதாரத்துறை இயக்குனரகத்திற்கு விசாரணைக்கு பரிந்துரைத்து கடிதம் அனுப்பிஉயுள்ளோம்.
அதில், தவறான அறுவை சிகிச்சை நடக்கவில்லை எனவும், இது சம்பந்தமாக மருத்துவக்குழுவினர் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் நேரில் வந்து விசாரணை செய்த பிறகே, ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்த டாக்டர்கள், செவிலியர், பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.