/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி கல்லுாரியில் சட்டம் குறித்த மாநாடு
/
சரஸ்வதி கல்லுாரியில் சட்டம் குறித்த மாநாடு
ADDED : மார் 22, 2025 08:43 PM

திண்டிவனம்: கோனேரிக்குப்பம் சரஸ்வதி சட்டக்கல்லுாரியில் தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு நடந்தது.
கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார், பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் ஆகியோர் புதிய சட்டங்கள் குறித்து பேசினர்.
கருத்தரங்கில் வி.ஐ.டி., சட்ட பள்ளியின் பேராசிரியர் ராஜ வெங்கடேசன், பேராசிரியர்கள் பிரேமா, ராஜலட்சுமி. புதுச்சேரி சட்டக்கல்லுாரி முதல்வர் குர்மிந்தர் கவுர், ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் சிவப்பிரகாசம், நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் நுாற்றுக்கு மேற்பட்ட சட்டக்கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.