/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயக்கமா... கலக்கமா... தலைமையின் நிலைப்பாட்டால் தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்
/
மயக்கமா... கலக்கமா... தலைமையின் நிலைப்பாட்டால் தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்
மயக்கமா... கலக்கமா... தலைமையின் நிலைப்பாட்டால் தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்
மயக்கமா... கலக்கமா... தலைமையின் நிலைப்பாட்டால் தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்
ADDED : நவ 11, 2025 06:33 AM

தே ர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை கடந்த 4ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. இது முற்றிலும் தி.மு.க.,வின் வெற்றியை தடுப்பதற்காக மத்திய அரசு செய்துள்ள சதி என தி.மு.க., தலைமை குற்றம் சாட்டி இதை எதிர்த்து வருகிறது.
இந்த திருத்தத்தை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
ஒரு பக்கம் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கும் தி.மு.க., அதே நேரம் இந்த திருத்தத்தை எப்படி செய்ய வேண்டும் என்றும், தகுதியான ஓட்டுகளை எப்படி பாதுகாப்பது என்றும் தி.மு.க., பூத் முகவர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் பல முறை பயிற்சி அளித்துள்ளது.
அத்துடன் அரசு நடத்திய பயிற்சி முகாமிலும் மற்ற கட்சிகளை விட தி.மு.க.,வினர் அதிகளவில் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபடும் அதிகாரிகளுடன் தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., நடத்தும் போராட்டம் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., எதிர்க்கும் தேர்தல் அணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் நாம் பங்கேற்க வேண்டுமா என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தி.மு.க., நடத்தும் போராட்டம் காரணமாக தீவிர தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வாபஸ் வாங்கவும் வாய்ப்பு இருப்பதாக தி.மு.க., தொண்டர்கள் கருதுகின்றனர்.
இதனால் எதிர்வரும் நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் தி.மு.க., தொண்டர்கள் ஈடுபாடு காட்டுவதா? வேண்டாமா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளனர்.

