/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தட்டுங்கள் திறக்கப்படும்... விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிட தலைமையிடம் நிர்வாகிகள் கோரிக்கை

ADDED : நவ 11, 2025 06:33 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் சீட் கேட்டு பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் காங்., அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியை பலப்படுத்தும் வகையில் 21 ஆயிரம் கிராம குழுக்களை அமைத்து களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 2026ம் ஆண்டு வர இருக்கும் சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் போட்டியிட காங்., ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக 125 இடங்களில் போட்டியிட தயாராகும் வகையில், 21 ஆயிரம் கிராம குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில், காங்., கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் தரப்பில், கட்சியின் மாநில தலைமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல தேர்தல்களில், கூட்டணியில் காங்., கட்சிக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மத்திய மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், மாநில துணைத் தலைவர்கள் குலாம் மொய்தீன், வழக்கறிஞர் ரங்கபூபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், வரும் தேர்தலில் காங்., கட்சிக்கு சீட் பெற வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில், செஞ்சி, திண்டிவனம், வானுார், விக்கிரவாண்டி, மயிலம், விழுப்புரம் தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியாவது, வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் பெற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.