/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 05, 2025 10:53 PM

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
இதன் மூலம் கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளி மாணவரகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று காலை பள்ளியின் விளையாட்டரங்கில், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்து.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் முருகவேல், உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஜான்சன் வரவேற்றார்.தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
முதுகலை ஆசிரியர்கள் அருண்குமார், மஞ்சுநாதன், வெங்கடேசன், பார்த்தீபன் மாணவர்கள் பாராட்டி பேசினர். இதில், ஆசிரியர்கள் சத்யவதி,ரவி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கணினி ஆசிரியர் குரு நன்றி கூறினார்.

