/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
/
விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : அக் 18, 2024 07:17 AM

திண்டிவனம்: மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் நடந்த தடகள போட்டியில் 3,000 மீ., தொடர் ஓட்டத்தில் மாணவி கோமதி, 1500 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வாசுகி, 800 மீ., தொடர் ஓட்டத்தில் மாணவி தர்ஷினியா முதலிடம் பிடித்தனர்.
மேலும், 600 மீ., ஓட்டத்தில் மாணவி இளமதி, 400 மீ., ஓட்டத்தில் லாவண்யா, குண்டு எறிதலில் ரூபிகா, தட்டை எறிதல் போட்டியில் பத்மபிரியா முதலிடம் பிடித்தனர்.
நீளம் தாண்டுதல் மாணவி தனுசியா, 19 வயதிற்குட்பட்ட தொடர் ஓட்டப்போட்டிகளில் கோமதி, சினேகா ஸ்ரீ, லாவண்யா, வாசுகி ஆகியோர் முதலிடமும்; 14 வயதிற்குட்பட்ட நீளம் தாண்டுதலில் மாணவர் பரத்குமார் முதலிடமும், 1500 மீ., தொடர் ஓட்டம் மற்றும் 200 மீ., ஓட்டத்தில் மாணவி லாவண்யா இரண்டாம் இடம் பிடித்தார்.
இதே போன்று 100 மீ., ஓட்டத்தில் மாணவி சினேகாஸ்ரீ இரண்டாமிடமும், 19 வயதிற்குட்பட்ட தொடர் ஓட்டத்தில் மாணவிகள் லாவண்யா, யோகிதா, நிஷா, தர்ஷினியா ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர். 17 வயதிற்குட்பட்ட தொடர் ஓட்டத்தில் மாணவிகள் ஹேமலதா, உஷாராணி, தீபிகா, தனுஷ்கா ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் சண்முகம், முதல்வர் சந்தோஷ், இயக்குனர் கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.