
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : மத்திய அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். காங்., நிர்வாகிகள் உதயாந்தன், தட்சணாமூர்த்தி, ராமமூர்த்தி, ஜானி, வெங்கட், அஜிஸ், பொன்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு, வருமான வரித்துறை மூலம் காங்., கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

