/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை
/
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : டிச 14, 2025 06:11 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மண்டல பொறுப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
சங்க மாநில தலைவர், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் தொடர்ந்து வரும் கட்டுமான பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களை தொழிலாளர் நல வாரியத்தில் இணைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில், திடீரென உயர்த்தப்படும் கொத்தனார் உள்ளிட்ட கட்டுமான பணியாளர்களின் தினக்கூலியை வரன்முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட கவுரவ தலைவர் முருகன், துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சாதிக், துணை தலைவர்கள் புருஷோத்தமன், டேவிட் மற்றும் கடலுார் மண்டல பொறுப்பாளர்கள், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

