/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் போலீசுக்கு ஓய்வு அறை கட்டுமான பணி பூமி பூஜை
/
பெண் போலீசுக்கு ஓய்வு அறை கட்டுமான பணி பூமி பூஜை
ADDED : மார் 22, 2025 03:51 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் போக்குவரத்து காவல் துறையில் பணி புரியும் பெண் போலீசாருக்கு ஓய்வு அறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், மயிலம் போக்குவரத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசார் பயன்படுத்தும் விதத்தில் 9.40 லட்சம் ரூபாய் செலவில் அறை கட்டப்பட உள்ளது.
விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் போலீசார் ஓய்வெடுக்கும் வகையில் காவல் நிலைய வளாகத்தில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் ராஜாமணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.