/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க கலந்தாய்வு கூட்டம்
/
பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க கலந்தாய்வு கூட்டம்
ADDED : அக் 31, 2025 02:33 AM
செஞ்சி:  செஞ்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க கலந்தாய்வுக் கூட் டம் நட்தது
அனந்தபுரத்தில் இருபாலர் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 568 மாணவர்கள், 453 மாணவிகள் என மொத்தம் 1021  பேர் படிக்கின்றனர். மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பால் தனியாக பள்ளி துவங் க கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் நேற்று பள்ளியில் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமையில், கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., அறிவழகன் முன்னிலை வகிக்க, தலைமையாசிரியர் ஆனந்தன் வரவேற்றார்.
இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் வி ஜயகுமார்,  பேரூராட்சி தலைவர்  முருகன், துணைத் தலைவர்  அமுதா கல்யாணகுமார், நகர செயலாளர் சம்பத், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளி துவங்க அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பள்ளிக்கு அறிவியல் ஆய்வகம், சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

