நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். வரும் 14ம் தேதி கொண்டாடப்படும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் மற்றும் வழங்கவுள்ள நலத்திட்ட உதவிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். டி.ஆர்.ஓ., அரிதாஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.